முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பசுமை

பூமி மேலே கானும் காட்சி
சாமி அவரின் படைப்பின் மாட்சி

பசுமை நிறைந்து வழிந்து ஒழுகும்
பசித்த விழிகள் உண்டு மகிழும்

பச்சை போர்வை போர்க்கும் மரங்கள்
உச்சபட்சமாக வானம் கொடுத்த வரங்கள்

மலையில் பிறந்து நதியும் ஊரும்
விளையும் பயிரால் உவகையில் ஊரும்

அலைந்து அலையும் முத்தமிடும் கரையும்
அளைந்திட ஆனந்தம் விட்டுப்போன நுரையும்

பூத்துக் குலுங்கும் பூக்களின் அழகும்
பார்த்துவிட்டாலே சந்தோசம் மனதுடன் பழகும்

இயற்கை என்பது இறைவனின் பரிசு
சுயமாய் சிந்திப்பின் கொடைகளில் பெரிசு

பசித்தவர் புசிக்கின்றார் பசுமையின் அருளே
ருசித்தவர் பாராட்டிவிடும் ஆளுமையின் பொருளே

திரண்டிருக்கும் வளங்களை பொதுவாக எண்ணுவோம்
உரமாக்கி உழைப்புதனை ஊரோடு உண்ணுவோம்

அகமும் புறமும் பேணட்டும் உண்மையை
ஜெகத்தில் உயிரினங்கள் காணட்டும் நன்மையை

ஜெயம்
24-06-2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading