நம் வாழ்வின் வேர்கள்…

வசந்தா ஜெகதீசன்
அடித்தளம் பற்றிய ஆணிவேர்கள்
அறுபட முடியாத உறவின் பற்று
இமயத் தொடுகையின் இருப்பிடங்கள்
இல்லையேல் நாமேது வாழ்விலின்று

தேடற்கரிய தேட்டங்களே
தேங்கிய அறிவின் சுடரொளிகள்
வரலாற்று வழியின் வலம்புரிகள்
வற்றாத் தாடகத்தின் வரம்பிவர்கள்

மூத்தோர் என்னும் முதுபெரும் சொத்து
முந்தைய உலகின் அறிவின் வித்து
பட்டறிவுப் பகுப்பின் படர்கொடீகள்
பண்பாட்டு வாழ்வின் முதுசங்கள்

விட்டகலா வாழ்வின் பெருங்கொடைகள்
விவேகத்திறனில் முன்னோக்கி
கற்றறிந்த கடலறிவின் படகோட்டி
கம்பீர வாழ்வரணின் வரமீட்டோர்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading