நம் வாழ்வின் வேர்கள்

அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்
நமக்காக உழைத்தவர்கள்
அனுபவங்களை புத்தகமாக
அடுத்த தலை முறை ஓங்கிட
அன்புடனும் கருணையுடனும்
தரும் ஆலயங்கள்!

தம்மால் கொடுத்தவைகளை எண்ணி இன்று நினைவுகளை
சுமப்பவர்கள்
நாம் வானைத் தொட்ட
வாழ்வு கண்டாலும்
மண்ணுக்குள் மறைந்த வேர்களின்
சிறப்பு சீர் தூக்கி
பார்ப்பதே சிறப்பு

நாம் சிறப்புற வாழ்கிறோம்
என்ற வரப்பு நம் மூத்தோர்
காணும் மகிழ்விலே தொடரும்!!

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading