01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால் ஆனவர்
பூணாய் இருந்தவர் புவிதனில் வேர்களே!
நேர்மை காத்து நெறிமுறை வழுவா
கூர்மை அறிவிலே குடும்பம் காத்தவர்
பார்போற்ற பரம்பரைப் பட்டியல் நீளச்
சார்ந்திருந் தவர்கள் சாதுரியம் மிக்கவர்
ஆழமாய் வேரூன்றி ஆலும் தழைத்து
வாழப் பக்க வாட்டில் துணைவேர்
பலமும் கொடுத்துப் பரந்து விரிந்து
நிலத்தில் நின்று நீளும் கிளைகளில்
விழுதுகள் தோன்றி வீழ்ந்திடா வண்ணம்
நழுவி விடாமல் நாளும் தாங்குதே
புயலும் மழையும் புரட்சி செய்தும்
அயற்சி இல்லா அருமைப் பணியில்
தாங்கி நிற்கும் தத்துவம் தகுமே!
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...