மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 212
28/02/2023 செவ்வாய்
“மொழி”
———
இனத்தைச் சுட்டிட மொழி உண்டு!
இருப்பில் ஆயிரம் வகை உண்டு!
தினம் தினம் வளரும் மொழியுண்டு!
தேய்ந்து அழியும் மொழியும் உண்டு!

அநாதியாம் மொழிகள் பலவுண்டு!
அவற்றில் தமிழுக்கும் இடமுண்டு!
கனதியாம் இலக்கியம் அதற்குண்டு!
கட்டுக் கோப்பதன் நிறை பண்பு!

ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள்
அவரிடைப் பேசவும் மொழியுண்டு!
சிற்றறிவு கொண்ட சித்தெறும்பும்
சீராய் தொடர்பாட வழி உண்டு!

“பரதம்”என்றொரு மொழியுண்டு!
“பாவங்கள்” நிறைய அதற்குண்டு
“கதகளி” என்னும் மொழி உண்டு!
கதைகள் சொல்வது அதன் பண்பு!

“மௌனம்” என்பதும் ஓர் மொழியே!
மானிட இனத்தின் பெரு மொழியே!
தவனம் காட்டிடும் இம் மொழியே!
தரணியில் இதுவும் தனி மொழியே!

கண்கள் பேசுவதும் ஓர் மொழியே!
கால்விரல் கோலமும் ஓர் மொழியே!
மின்னல் போன்றது இம் மொழியே!
மெதுவாய் வருடிடும் இம் மொழியே!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading