திசை காட்டிகள்ராணி சம்பந்தர்03.10.24 ஆக்கம் 332 திசை காட்டிகள் திசை காட்டியின் தீராத தாகம் திக்குத் தெரியாத சிறுவரைப் பள்ளியில் பக்குவமாய்ச் சேர்த்து பாரமெடுத்த பாகம் ஊக்கமுடன் விழி மேல் விழி வைத்து தூக்கம் இன்றிய வேகம் தாழ்வு மனப்பான்மை நீக்கி வசதியின்மை போக்கி வாழ்வின் சோகம் மறைக்க வேறு திசை திருப்பிய தாகம் சக்தியினால் புத்தகம் வாசித்திடு புத்தியினால் சித்தி அடையத் தேடலில் விளைச்சலிட்டு உயர்ந்திடென ஊட்டிய வழிகாட்டிகள் சுயமரியாதையுடன் தைரியமாய் உழைத்து வாழ்வில் ஊன்றிட நின்றிட்ட திசைகாட்டி தெய்வங்களே எத்திசை இருப்பினும் பாதந் தொட்டு போற்றிப் புகழ் மாலை போட்டிடுவோமே. ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து