கவிதை நேரம்-10.10.2024 கவி இலக்கம்-1929 புரட்சிப்பெண் மாலதி -கவிதை நேரம்-10.10.2024 கவி இலக்கம்-1929 புரட்சிப்பெண் மாலதி -கவிதை நேரம்-10.10.2024 கவி இலக்கம்-1929 புரட்சிப்பெண் மாலதி ------------------ தமிழீழ விடுதலைப் போராட்டம் ஈழ மண்ணுக்காக புரட்சிப்பெண் மாலதி விடுதலை பாதையில் வீர நடை போட்டவள் தனி அடையாளமாய் கால் பதித்தவள் மன்னார் பிறந்து சகாயசீலியா மாலதி அமைதிப் படையின் போர்க் களத்தில் 10.10.1987 ல் இந்திய இராணுவ முனையில் சரி சமனாக நின்று போராடி சாதித்தவள் காலில் குண்டு பட்டு படு காயப்பட்டவள் கழுத்திலிருந்து நஞ்சை அருந்தி மடிந்தவள் முதலாவது பெண் வித்தாய் மாலதி பெயரானாள் புரட்சிப் பெண்ணாக அவதாரம் எடுத்தாள் வீரத்தில் முதல் பெண்ணாக விதையானாள் தமிழர்கள் தலை நிமிர வழிகாட்டி மறைந்தாள் விதையாகி மண்ணில் விழுதாகி உயர்ந்தவள்