அமைதியின் தூதுவன்ரஜனி அன்ரன்“ அமைதியின் தூதுவன் “....கவி.....ரஜனி அன்ரன் (B.A) 24.10.2024 இருளில் ஒளிவீசும் கலங்கரைவிளக்கு உலக நாடுகளை ஒன்றிணைக்கும் தூதுவன் உலகை வழி நடாத்தும் அமைதியின் நாயகன் ஐக்கியத்தைப் பேணிடும் ஐக்கியன் மனித குலத்தின் அறங்காவலனுக்கு மகத்தான நாளாம் இன்று ஐப்பசித் திங்கள் இருபத்தி நான்கு ஐக்கிய நாடுகள் சபை தினமாம் ! உலகில் ஐக்கியத்தைப் பேண அமைதியை அமுலாக்க சமாதானத்தைச் சமரசமாக்க பாதுகாப்பைப் பலப்படுத்த பசி பட்டினியைப் போக்க பேரிடர்களைப் போக்கி மானிடரைக் காக்க மகத்துவமாய் மலர்ந்ததே ஐ.நா. சபையாம் அமைதியின் தூதுவன் ! வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்பு அமைதியின் தூதுவனையும் ஆட்டம் காண வைக்குது ஆங்காங்கே போர்களும் தான் வெடிக்குது அமைதியெங்கும் நிலவட்டும் ஐ.நா.வின் கொடி எங்கும் பறக்கட்டும் ! https://www.youtube.com/watch?v=zmqH_ixv4kI