மாதவமே உந்தனைசிவரூபன் சர்வேஸ்வரிமாதவமே உந்தனை மானிலம் செழித்தது மலர்க்கொடிகள் படர்ந்தது // தேனினமாய் வாழ்வுகள் அதுவே பொற்காலம் // மூளும் நிலையும் மூண்டது அது பெரும் நெருப்பும் // வாழும் பயிர்கள் வகைவகையாய் எங்கே கேள்விக்குறிதானே // மீளும் கட்டம் இல்லை மீட்டிடத் துணையுமில்லை // தரமும் தீரமும் செறிந்துமே தெறிக்க // தாரையும் வார்த்த மாதவமே உந்தனை // சிந்தையில் ஏற்றியே தொழுதிடும் முறையே // மனமது கனக்கும் வலியது துடிக்கும் // நினைந்தது எங்கே கேள்வியும் கணைதொடுக்கும்// ஞாபகங்கள் நிழலாட ஞாலத்தில் ஒளியாட // தீபங்கள் மிளிர்ந்ததுவே தியாகங்கள் நெருப்பாக // தாபங்கள் ஊறியதும் தணியாது ஆடியதும் // தூபங்கள் போட்டென்ன கல்வெட்டில் பொறித்ததுவே // சிவருபன் சர்வேஸ்வரி