கேட்டுமே நின்றுவிடுசிவரூபன் சர்வேஸ்வரிகேட்டுமே நின்றுவிடு மெளனம் ஏனோ நிலவும் சுடுகிறதே // சயனமென்ன கதிரவனைக் காணலையே// விரையமென்ன விடுதலை வரவில்லையே // விசனமென்ன பதிலும் தருவதில்லையே // அயராது கொட்டுகிறாய் யாரு சொல்லித்தந்தது // புயலாக நிற்கின்றாய் சீற்றமேன் வந்தது // துயிலாமல் சுழல் கின்றாய் சூட்சியார் செய்தது // புலராத நாட்கள் இல்லையே புலர்துவிடு நன்றாக நீயும் // கனவுலகுக் காரிகையே கார்மேகம் அகலட்டும் // நினைவுலகில் வந்துவிடு நிம்மதியும் பெறவேண்டும் // வனமது இருண்டது போல் வையகமே இருண்டுவிட்டால் // மையல்விழி என்னாகும் மானிலத்து மாதாவே // கேள்வியொன்றைத் தந்துவிட்டேன் கேட்டுமே நின்றுவிடு // சிவருபன் சர்வேஸ்வரி