பிரபஞ்சம் என்னும் பெண்பிரபஞ்சம் என்னும் பெண்கவிதை 233 அமைதியான முழுமதியாய் இருளை ஒழித்து இல்லத்தில் ஒளி சேர்க்கும் பேரழகு பெட்டகமே அன்புகொண்டு அணைப்பாள் குடும்பத்தையே அறிவு ஆற்றல் கொண்டவள் தேவதை என்பார் பெற்றவர் உனக்கு எதுவும் தெரியாது உன்னால் முடியாது என்பார் துணைவர் இடி மின்னல் மழை காற்று எதையும் தாங்கும் தரணி போல வறுமையான வாழ்விலும் மகிழ்வுடன் இல்லறம் நடத்தும் சக்தியே வனவிலங்கின் அரசன் மேல் அமர்ந்திருந்து அடக்கியாளும் அரசியே உன் திறமையை வளர்த்து சமுதாயத்தை சிறப்பாக நடத்து புலம்பாமல் நன்றி வணக்கம்