" பூத்துவிட்டது புத்தாண்டு "ரஜனி அன்ரன்“ பூத்துவிட்டது புத்தாண்டு “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 02.01.2025 மத்தாப்பு வாண வேடிக்கையோடு முத்தாப்பாய் பூத்தது புதிய புத்தாண்டு புதிய தொடக்கங்கள் புத்துணர்வுத் தூண்டல்கள் புதிய தேடல்கள் வலுப்பெறட்டும் கொடிய நோய்களும் நெடிய போர்களும் அகலட்டும் சமூக ஒருங்கிசைவும் மேம்படட்டும் ! கடந்த ஆண்டு பலதும் பத்துமாய் இயற்கையின் சீற்றமும் சீர்குலைவுமாய் இடர்களாய் வந்து இடையூறு செய்து விடை பெற்றுச் சென்றதே விருப்பின்றி பூத்துவிட்ட புத்தாண்டு புன்னகையை அள்ளித் தரட்டும் புண்பட்ட உள்ளங்களை பண்படுத்தி மகிழட்டும் ! இருபத்தி ஐந்தில் பூத்திட்ட ஆண்டே திருப்பங்கள் மலர்ந்திட விருப்பங்கள் நிறைவேறிட எண்ணங்கள் வண்ணங்களாக ஏற்றங்கள் மாற்றங்கள் உருவாகிட இணைக்கரம் தந்துவிடு புத்தாண்டே ! https://www.youtube.com/watch?v=D73M_fSi5OY