போனும் போராட்டமும்ஜெபா ஸ்ரீதெய்வீகன்🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-46 09-01-2025 போனும் போராட்டமும் விருந்துக்கு அழைத்து விபத்தில மாட்டியது போல விஞ்ஞான வளர்ச்சியில் விண்ணானம் வந்தது உறவோடு கூடி உணவு உண்ட காலம் போய் உறவைக் கண்டாலே தள்ளியோடுதுகள் சிறுசுகள். ஒளி ஒலியைக் குறைத்து வைத்து ஓரிடத்தில் உட்கார்ந்து கண்ண முழிச்சு பாசத்தை வெறுக்க வைத்து பார்வையை கெடுக்குது. போனும் போராட்டமும் தொடந்தாலும் பயனும் நிறையவே காணும் அளவோடு பாவித்து அனுகூலம் பெறுவோமே. நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.