உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வாழ்வில் கலையும் தொடரா நிலையும்

வாழ்வில் கலையும் தொடரா நிலையும்

கவி 760 வாழ்வில் கலையும் தொடரா நிலையும் காலங்கள் போக எல்லாமும் மாறும் ஞாலத்தின் பரப்பிலே நுட்பங்கள் மீறும் பழையவை அருகி புதியவை புகுந்திடும் நுழைந்துமே புதுமை மாற்றத்தை நிகழ்த்திடும் பண்டைய காலத்தின் மனிதனின் செயற்பாடு இன்றைய காலத்தோடு ஒட்டாத வெளிப்பாடு அன்றைய கலைகளை நினைக்கவும் நேரமில்லை பண்பாடு கலாசார பெருமையிலும் நாட்டமில்லை. பாரம்பரிய நிலை இயலாத வழியாய் காரணம் நவீனத்தின் உள்ளடக்கம் எளிதாய் விட்டுவிட்டுப்போன நம் முன்னோர்களின் பழக்கநிலை கற்றுக்கொண்டு தொடராத துர்ப்பாக்கிய நிலை தலைமுறைக்கு இங்கே கடத்திவிட துடித்தும் நுழைத்துமே வாழ்வியலுள் பயனடைய முயன்றும் அந்தக்கால பன்முக பண்பாட்டு அடையாளம் இந்தக்கால வாழ்க்கையோ புறக்கணித்ததை நீளும் ஆக்கப் பயன்படும் பயன்தரு கலைகள் தேக்கியதை தொடராத இக்கால நிலைகள் கலை தன் கட்டுக்களை உடைத்தெறிந்ததா இல்லை அப்படியில்லையெனின் விடை தெரிந்ததா ஜெயம் 06-02-2025

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to