சக்தி சக்திதாசன்சக்தி சக்திதாசன்வாழ்க்கைக்கு பணியாகும் சேவைக்கு பணியாகும் ஆளுமைக்கு பணியாகும் அனைத்துக்கும் பணியாகும் பணியின்றி ஜகமில்லை பணியின்றி நலமில்லை பணியின்றி உணவில்லை பணியின்றிப் பலனில்லை பணியாலே ஜெயமுண்டு பணியாலே சிறப்புண்டு பணிகண்டு பயமுண்டு பணியின்றி எதுவுண்டு ? நிலமடந்தை பணியாலே நிறைந்திடும் வளங்களே வான்மகளின் பணியாலே வளர்ச்சியுறும் இயற்கையே பணி பணிக்காகவோர் கவிதை படைத்திடுமோர் பணி பாரினிலே பலபணிகள் பாவினிலே ஒலிக்கிறது