திருமதி.அபிராமி கவிதாசன்.அபிராமி கவிதாசன்04.10.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -194 “கலை மகளே” கல்வியின் அதிபதி கலைகளின் நாயகி செல்வத்துள் செல்வம் சிந்தைதரும் சரசுவதியே வெள்ளைத் தாமரை வீற்றிருந்து கற்றோர் உள்ளக் கோவிலில் குடியிருக்கும் கலைமாமணியே/ மழலை மனதில் மதியினைப் பதித்து அழகுதமிழில்அறிவைத்தரும் ஞானதேவியே வீணைஉந்தன் சேயாய் விரல்களில் தவழும் ஆணையிட்டே மீட்பாயே அழகுதமிழில் இசைவாணியே / அஞ்ஞானம் விஞ்ஞானம்அஞ்சாத மெய்ஞானம் எஞ்ஞானமாயினும் அறிவாயுதம் எடுத்தாலும் அட்சயதேவியே சரசுவதியே சரணம் சரணமம்மா-உந்தன் சந்நிதி தொழுதிடல் சாலச்சிறந்த வரமேயம்மா / நன்றி வணக்கம் 🙏