திருமதி.அபிராமி கவிதாசன்.அபிராமி கவிதாசன்31.01.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-208 தலைப்பு ! “விருப்பு “ விருப்புக் கொண்டு வினையில் இறங்கு வியக்க வைக்கும் விதியில் மதியால்// திருத்தம் உடனே தினமும் முயற்சிக்க திருப்பம் காண்பாய் திகைப்பில் மூழ்கி // விரும்பி உண்டிட விசமும் வசமாகும் வேண்டாதவை என்றதும் விலையாயினும் விசமாகும் // கருத்தாய் கண்ணாய் கருமச் செயலை கருதிச் செய்திட கனியாய் தித்திக்கும் // விருப்பம் தவிர்த்து வெறுப்பைக் காட்டி விருந்தும் கூட காயாய் கசக்கும்// உருவம் ஒன்றும் உள்ளம் ஒன்றும் உரைக்க கேளா உண்மை அறிக // ……………….நன்றி 🙏……………………….. கவித்திறனாய்வு தட்டிக்கொடுப்பு பணி, அதிசிறப்பு . தங்கள் பணி தொடர மனமார்ந்த பாராட்டுக்கள். பாவை அண்ணா. நன்றிகள் 🙏 நன்றி …பாவை அண்ணா 🙏