உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சிறினிசங்கர்

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு ஊக்கி! கவிஞர் வாலியின் வரிகள் ஊக்குவிப்பவர் ஊக்குவித்தால் ஊக்குவிப்பவரும் தேக்கு விற்பர் நாணயத்தின் இருக்கம் போலே நம்மனம் பக்குவம் அடையும் பிறர் மனம் உற்சாகம் அடையும் ! ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பாராட்டும் இருகரங்களில் சேர்ந்த கரவொலியும் உருவாக்கும் புதியதோர் அத்தியாயம்! விழிகளில் வியப்புடன் வழிமொழியும் வார்த்தைகளால் மழலையின் மனச்சிறகு மகிழ்ச்சி வானில் பறக்குமே மனத்தில் வேர்விட்டு விண்தொட்டு வாகை சூட வழி வகுக்குமே! பிறர்க்கோர் இன்னுரை முன்னுரையாக எழுச்சிப் படுத்துமே! முறைகேடான ஊக்கிகளால் குறைகூறும் அளவில் கறைபடிந்த மாணவமணிகள் நிறைவான சாதனையாளர்களாக மாற நல் ஊக்கிகளாக இருப்போம்! என்று கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன். ப.வ.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள்! திரு.நடா மோகன் அவர்களே! உற்சாகம் தரும் உங்களுக்கும் மிகுந்த நன்றி! அனைத்துக் கவிப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுகள்! நன்றி வணக்கம்!

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to