திருமதி . அபிராமி கவிதாசன்.அபிராமி கவிதாசன்14.03.2023 சந்தம் சிந்தும் நிகழ்வு -214 தலைப்பு ! “தீ” அன்னம் தண்ணி அமிழ்து உணவும் ஆகாரம் ஆக்கும் ஆற்றல் தீயே // அக்கினித் தீயே அற்புதம் நீயே அன்னை சக்தி கொண்டவள் நீயே// அடுப்பை மூட்டி ஆக்கி வடிக்கும் அழகிய இல்லம் சிறக்க செய்தவளே // தீபத் தீயாய் உருவாகி உலக தீமை பொசுக்கி எரிக்க கண்டேன். // தூபப் பொடிக்கும் துளித்தீயும் புத்துயிராய் துர்வினை பலவும் விரட்டக் கண்டேன் // தீக்குச்சி துளித்தீ செந்தளிர் தீபம் தீவினை அகற்ற ஏற்றக் கண்டேன் // போகி பண்டிகை புதியென புகுத்த பொசுக்கி பழையென அழிக்க கண்டேன் // சூரிய தீச்சுடர் சுகப்படும் வாழ்வில் சொரிந்து நிறைந்து பொழியக் கண்டேன் // நன்றி 🙏