மூண்ட தீநகுலவதி தில்லைதேவன்சந்தம் சிந்தும் கவி 224. 30.5.23 நகுலவதி தில்லைதேவன். மூண்ட தீ கார்த்திகையில் அண்ணாமலையில் அண்டாவில் மூண்டிய 🔥 பத்தகோடிகளை பரவசப்படுத்துமே. சிறிலங்காவில் மூண்டது தீ 🔥 சீதையிட்ட சாபமே தொடருது தீவைப்புக்களே. தீயினால் சுட்ட புண் ஆறுமே நாவினால் சுட்ட வடு ஆறுமோ. தீயை மூட்டாது அமைதியாய் வாழ்வோமே யாழில் 🔥🔥🔥 பரவிய தீ தியேட்டரில் நிறைந்த மக்கள் வெள்ளமே. என்பத்திமூன்றில் 🔥 தீ எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே . அடி தடி கடைகள் கொள்ளை காடையர் விரட்டவே தமிழர் அகதியாய் பிறந்த யாழ் மண்ணுக்கு உடுத்திய உடுப்புடன் கப்பலில் திரும்பினரே மூட்டிய 🔥 சிங்கள இனவெறி கொண்டு மூட்டியே 🔥 யாழ் நூலகம் தீயிலே வெந்து நூல்கள் கருகி பொசுங்கியதே மீண்டும் நூலகம் தலை நிமிர்ந்தே நிற்கிறதே.. . அன்னையிட்ட 🔥 அடிவயிற்றிலே பின்னையிட்ட தீ. மூழ்க மூழ்க என்று பட்டினத்தார் பாடினாரே அன்னைக்கும் அப்பனுக்கும் இறுதி கொள்ளி சுடுகாட்டிலே. மூட்ட உடலும் 🔥 சாம்பலானதே!!! காட்டுத் 🔥 கருகிய விலங்கினம் உயிரினம் அழிகிறதே மரம் செடி கொடி இயற்கை அழிவை தடுக்க அரசும் போராடுகிறதே. அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம். நன்றி.