உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்

உள்ளதைச் சொல்லிவிடு - இல்லையேல் தள்ளியே நின்றுவிடு நல்லதைச் செய்துவிடு - இல்லையேல் நயமாய் விலகிவிடு இன்பத்தை விதைத்துவிடு - இல்லையேல் இல்லாது சென்றுவிடு துன்பத்தைத் துடைத்துவிடு - இல்லையேல் தூரத்தே விலகிவிடு நேசத்தை வளர்த்துவிடு - இல்லையேல் நெஞ்சத்தை மறைத்துவிடு பஞ்சத்தை அழித்துவிடு - இல்லையேல் பசிப்பையே புசித்துவிடு அச்சத்தை எரித்துவிடு - இல்லையேல் ஆயுளை முடித்துவிடு தாகத்தைத் தணித்துவிடு - இல்லையேல் தணலாய்த் தகித்துவிடு மனிதனாய் வாழவிடு - இல்லையேல் மனிதத்தைத் மறந்துவிடு மன்னிக்கக் கற்றுக்கொடு - இல்லையேல் மாண்பினில் தாழ்ந்துவிடு உண்மையைப் பேசிவிடு - இல்லையேல் உள்ளத்தை மயக்கிவிடு கண்டதைச் சொல்லிவிடு - இல்லையேல் கண்களை இழந்துவிடு உன்னையே அறிந்துவிடு - இல்லையேல் உணர்வினில் மூழ்கிவிடு ஆன்மாவை புரிந்துவிடு - இல்லையேல் அறிவினைத் துறந்துவிடு சக்தி சக்திதாசன்

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to