நடிப்புராணி சம்பந்தர்25.06.24 ஆக்கம் 152 நடிப்பு கோடி மக்களில் நாடியதோ நடிப்பு தேடிய தூக்கமதில் மூடியதோ தடிப்பு வாடிய முகமதில் வடித்ததோ வெடிப்பு ஆடிய ஆட்டத்தில் அடங்கியதோ துடிப்பு கூடிய கூட்டத்தில் கள்ளக் குறிஞ்சி சிதறடிப்பு நாடிய நாட்டமதில் நீடிப்பு குடியே குடியைக் கெடுத்த கதறடிப்பு கொடிய விஷமே உயிரடிப்பு நெடிய வாடை நோண்டி நொடிப்பொழுதில் பிண மூடை தோண்டி மூடிய விழிகள் பாடிய சோடிப்பு வாடிய மாதரில் கண் சிமிட்டிக் கண்ணீர் விட்டுக் கதறிய மதுவில் மீண்டும் வரவேற்கும் மெத்தலீனின் நடிப்பு. ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து