மாற்றம்வசந்தா ஜெகதீசன்மாற்றம்.. நாட்காட்டி நலிகிறது நாளுமாய் மெலிகிறது மாற்றத்தை உரைக்கிறது மறுதலிப்பாய் விழிக்கிறது நேற்று என்று ஓர்தினம் நாளை என்று மறுதினம் ஓடி மறையும் வேளைக்குள் மாற்றமே மறுமுகம் விரைகின்ற கடுகதியில் வினைத்திறன்கள் ஏராளம் மாற்றத்தின் திறவுகோலே மதிநுட்ப உலகாகும்! நன்றி