சக்தி சக்திதாசன்சக்தி சக்திதாசன்சந்தம் சிந்தும் சந்திப்பு 288. அதோ ! அந்த வானத்தின் அந்தத்திலே செந்நிறமாய் ! மறைந்து கொண்டே ஆதவன் . . . இதோ இந்த முற்றத்தின் இதயத்தில் இருளாய்த் தவழ்ந்திடும் இரவு . . . ஏதோ எழுந்த கனவுகளில் எழுதாத ஓவியமாய் என்னென்னவோ சித்திரங்கள் . . . தீதோ தீண்டாத நினைவுகள் தீயினைப் போலவே தீய்க்குது நெஞ்சத்தின் உணர்வுகளை . . . சூதோ சூழ்ந்த சொந்தங்கள் சூழ்ச்சியின் விளைநிலமாய் தீட்டிடும் சூட்சுமத் தந்திரங்கள் . . . மீதோ மீண்டிருக்கும் காலத்தில் மீட்டிடும் கானங்கள் எல்லாம் மெளனமாய் இதயத்தினுள் புதைந்திடும் . . . சக்தி சக்திதாசன்