அலை-71ஜெபா ஸ்ரீதெய்வீகன்ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-04-2025 அலை அலையாய் கனவுகள் அலைந்து போன வாழ்வினால் நிலையற்று போன கதை நீவிரும் தான் அறிவீரோ மீண்டெழும் அலை போல மீண்டுமொரு சுமை யாத்திரை வேண்டாத கொடிய நோயும் விரைந்திங்கே உணவு மாத்திரை கரை வரும் அலைபோல கரைந்து போக சோகங்கள் நிரையான முயற்சி நிலைத்து நரை வந்தாலும் நடைமுறையாக்கி அமைதியான் கடல் போல அலையற்ற வாழ்வு நிலையாக சிலையற்று சிறுபயிற்சி செய்து சீரான வாழ்வு செதுக்கிடுவோம்.