உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
முக்கிய செய்திகள்
FirstAudio.net-க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
செய்திகள்
அடுத்த தலைமுறைநோக்கிசெய்திகள்
← சன்ரைஸ் செய்திகள்

உலகச் செய்தி செல்வி நித்தியானந்தன்

👁 3உலகச் செய்தி செல்வி நித்தியானந்தன்
 கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தங்கள் கட்சிக்காரர் பலிகடா ஆக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் புதிய வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.

ரானுக்குச் சொந்தமான கெஷ்ம் (Qeshm) தீவைக் இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மூன்று அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் மற்றும் கட்டார் அதிகாரிகளுக்கு இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பால், உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை சுமார் 4 வீதத்தால் சரிந்துள்ளது.
பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியமர, வெளிநாட்டவர்கள் இனி 15 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்னும் விதியிலிருந்து, முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளும் பணியாளர்களில் ஒரு பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதி பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.
நேபாளத்தில் எவரெஸ்ட் மலைக்கு அருகாமையில் உள்ள சோலுகும்பு பகுதியில், அதிக உயரத்தில் அமைந்த விமான மையத்தில் தரையிறங்க முயன்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வானில் முக்கோண வடிவிலான ஒளிக்கூட்டம் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துபோயுள்ளது.

பிரித்தானியாவின் இங்கிலாந்தின் சால்ஃபோர்ட் நகருக்கு மேலே முக்கோண வடிவிலான ஒளிக்கூட்டம் ஒன்று வானில் தோன்றி, கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துபோனதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FIRSTAUDIO · உங்கள் ஆதரவு

அடுத்த தலைமுறைக்காக
இணைந்து முன்னேறுவோம்.

உங்கள் ஆதரவு, இந்த ஊடகத்தை அடுத்த நிலைத் தொழில்நுட்பத்திற்கு முன்னெடுத்துச் செல்ல உதவும். மேம்பட்ட ஒலி, ஒளி மற்றும் புதிய இணைய வசதிகளுடன் உலகத் தமிழரை மேலும் நெருக்கமாக இணைக்க உங்கள் பங்களிப்பு துணை நிற்கும்.

உங்கள் ஒவ்வொரு பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றி!
I'd like this amount to