தமிழ்ச் சொல் வேட்டை — விளையாடுவது எப்படி?
வணக்கம், ஃபர்ஸ்ட் ஆடியோ உறவுகளே!
எழுத்துக் கட்டத்துக்குள் ஆறு தமிழ்ச் சொற்கள் ஒளிந்திருக்கின்றன. சிறிய குறிப்புகளின் உதவியுடன் அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? வாங்க, தமிழ்ச் சொல் வேட்டை விளையாடலாம்!
1. குறிப்பைப் படியுங்கள்
விளையாட்டுப் பக்கத்தில் இருக்கும் விடைகளுக்கான குறிப்புகளில் ஒன்றை முதலில் படியுங்கள்.
“உயரத்திலிருந்து கீழே கொட்டும் இயற்கையான நீரோட்டம் எது?”
விடை: அருவி!
இப்போது “அருவி” என்ற சொல்லை எழுத்துக் கட்டத்தில் தேடுங்கள்.
2. மறைந்திருக்கும் சொல்லைத் தேடுங்கள்
சொற்கள் பின்வரும் திசைகளில் அமைந்திருக்கலாம்:
- குறுக்காக
- மேலிருந்து கீழாக
- சாய்வாக
குறிப்புக்கு ஏற்ற சொல்லை யோசித்து, அதன் எழுத்துகளை வரிசையாகக் கண்டுபிடியுங்கள்!
3. சொல்லைத் தேர்ந்தெடுங்கள்
கைப்பேசியில்:
சொல்லின் முதல் எழுத்தைத் தொட்டு, கடைசி எழுத்துவரை விரலை இழுங்கள். அல்லது, முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் தனித்தனியாகத் தொட்டுத் தேர்ந்தெடுக்கலாம்.
கணினியில்:
மவுஸ் மூலம் முதல் எழுத்திலிருந்து கடைசி எழுத்துவரை இழுத்துத் தேர்ந்தெடுங்கள். அல்லது, முதல் மற்றும் கடைசி எழுத்துகளைத் தனித்தனியாகக் கிளிக் செய்யுங்கள்.
4. உங்கள் முன்னேற்றத்தைப் பாருங்கள்
சரியான சொல்லைக் கண்டுபிடித்ததும், அந்த எழுத்துகள் நிறம் மாறும்.
திரையில் நீங்கள்:
- எத்தனை சொற்களைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்
- எவ்வளவு நேரம் எடுத்திருக்கிறீர்கள்
என்பதைப் பார்க்கலாம்.
ஆறு சொற்களையும் கண்டுபிடித்து சவாலை நிறைவு செய்யுங்கள்!
5. நண்பர்களுக்கும் சவால் கொடுங்கள்
“விளையாடுவது எப்படி?” பகுதிக்குக் கீழே இருக்கும் “Invite Friends” பொத்தானை அழுத்தி, விளையாட்டு இணைப்பை நண்பர்களுடன் பகிருங்கள்.
ஆறு சொற்களையும் யார் முதலில் கண்டுபிடிக்கிறார்கள் என்று பாருங்கள்!
குறிப்பைப் படியுங்கள்… சொல்லை யோசியுங்கள்… எழுத்துகளில் தேடுங்கள்!
இன்றைய தமிழ்ச் சொல் வேட்டை உங்களுக்காகக் காத்திருக்கிறது!
FirstAudio.net — விளையாடலாம் வாங்கோ!

