இண்டிகோ விமானம்
இந்தியா
தரையிறங்க முற்பட்டு நரியால் திருப்பிவிடப்பட்ட இண்டிகோ விமானம்
அனைத்து பெட்டிகளையும் மற்றும் சாமான்கள் வைக்கும் இடங்களையும் சல்லடை போட்டுத் தேடினர்.
Published:11th Nov, 2026 at 10:48 PM
கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு, ஒரு நரி ஓடுபாதைக்குள் நுழைந்ததால் இண்டிகோ விமானம் ஒன்று திசை திருப்பப்பட்டது. சென்னையில் இருந்து வந்த அந்த விமானத்தின் விமானி, ஓடுபாதையில் ஒரு நரியை கண்டதும் உடனடியாக வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
விமானம் தரையிறங்குவதற்கு முன்பு மீண்டும் மேலே செல்லுமாறு வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் (ATC) உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, அந்த விமானம் துர்காபூரில் உள்ள ஆண்டாள் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

