துளி நீர்தங்கராஜாகவி 599 துளி நீர் நிலைத்து இன்னும் வாழ்கின்றது உயிர் தலைநிமிர்ந்து உயர்ந்து வளர்கின்றது பயிர் மேகந்தரும் வரமாய் மழைநீரைப் பாரு தாகந்தீர்க்கும் சாமியென்றே அதனைக் கூறு வேருக்கு பாலூட்டி ஊருக்கு உணவூட்டும் ஆறாகி காய்ந்த தரையை குளிப்பாட்டும் அளவாய் வந்து அள்ளியே தந்திடும் வளமான பூமியை துளிநீர் செய்திடும் நீர் இன்றி அமையாது உலகு பார் மனிதா மதிப்பததை அழகு சேறாக்கி சோறுத்தரும் நீரென்ற அமுது ஊறாது நீர்போனால் பஞ்சமொன்றே நமது நிலத்தடியில் கிடைக்குமொரு வாழ்வுதரும் பொக்கிஷம் வளர்த்துவிட மரஞ்செடியை தரையெங்கும் பசுமையின்வசம் சிக்கனமாய் செலவுசெய்வோம் ஒருசொட்டு நீரையும் அக்கறையோடு பார்ப்போமே வறட்சியால் வாடுவோரையும் விழித்துக்கொள்ள வந்துகொண்டது நல்ல நேரம் துளி நீரையும் வீணாக்காது காப்போம் புவியீரம் நீரின்றி ஓருயிர்க்கூட தவித்திடல் ஆகாது பாரதனைக் காத்திடுவோம் நீர்வற்றிப் போகாது ஜெயம் 22-03-2022