பசுமைரஜனி அன்ரன்“ பசுமை “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 31.03.2022 இறைவன் அளித்த வரம் இயற்கை தந்த அற்புதம் பசுமையெனும் வளம் செழுமை சேர்க்கும் திறன் பசுமையின் செழிப்பு பாருக்கே வனப்பு ! நீண்ட நெடிய வானம் விரிந்து கிடக்கும் பூமி பரந்து இருக்கும் கடல் உயர்ந்து நிற்கும் மலைகள் ஆங்காங்கே சமவெளிகள் பள்ளத்தாக்குகள் ஆறுகள் குளங்கள் ஏரிகள் நீர்நிலைகள் அடர்ந்த வனங்கள் மரஞ்செடி கொடிகள் அத்தனையும் மொத்தமாய் பசுமையின் வனப்பே ! பச்சைக் கம்பளம் விரித்த புல்வெளிகள் இச்சை தரும் பச்சை வண்ணம் மனதிற்கு இனிமையாய் மகிழ்வின் உச்சமாய் புத்துணர்வைத் தருவது பசுமை பூமியைப் பசுமையாக்க பசுமைஇயக்கம் மக்களுக்கு பசுமையைப் புகட்ட பசுமைக்கட்சி விவசாயத்தில் பசுமையைப் பேண பசுமைப்புரட்சி பூமியின் வளத்திற்கு வனப்பு பசுமையே !