நாட்டுவாழ்க்கையா காட்டுவாழ்க்கையாதங்கராஜாகவி 601 நாட்டுவாழ்க்கையா காட்டுவாழ்க்கையா பித்துப் பிடித்தே ஆடுதே மானுடக் கூட்டம் சித்தம் கலங்கி ஆடுதே ஆடாத ஆட்டம் யுத்தமொன்று தீர்வாகாது அழிவையே கூட்டும் கத்தியெடுத்து குத்தினாலது பகையினை ஊட்டும் இறைவன் படைத்தவுலகத்திலேனோ ஆயுத விளையாட்டு சிறைப்படுத்தலாமோ ஜனநாயகத்தை பூட்டினைப் போட்டு மறைசொன்ன வார்த்தைகளை வளர்ந்தவரும் கேட்டு கறைபட்டுக் கொண்டாரே பாடிச் சுயநலப்பாட்டு காட்டுமிராண்டியாய் அறியாத வாழ்க்கை அந்தக்காலம் நாட்டுக்குள் புகுந்த பகுத்தறிந்தவாழ்க்கை இந்தக்காலம் போட்டுடைத்தே வாழ்க்கையை ஏனிந்த அலங்கோலம் காட்டிவிட அதிகாரத்தை போட்டிபோட்டழியவாவிந்த ஞாலம் கூடாது உயிரழிவுகள் பூலோகத்தில் கூடாது வாடாது நேசமலர்கள் ஒருபோதும் வாடாது தேடாது உலகமகா அன்பைத் தேடாது மூடாது சமாதான மேகம் மூடாது. ஜெயம் 02-04-2022