Selvi Nithianandanசெல்வி நித்தியானந்தன்நிலைமாறும் பசுமை (515) 12.05.2022 ஆரோக்கிய வாழ்விற்க்கு ஆதாரம் அவனியிலே இப்போ சேதாரம் ஆதி மனிதனிரின் அடையாளஅங்கம் பாதி அழித்து விடை தேடிய பங்கம் தானியங்கள் பழங்கள் காய்கறிகள் தாதுப்பொருட்கள் இப்படியே கலப்படம் உண்ணும் உணவிலும் ஊட்டச் சத்திலும் உயருது புதிய நோய்களின் தாக்கம் இயற்கையை அழித்து தேடும் செயற்கை இதனாலே அழிந்து உருக்குலையும் மானிடம் இலவசமாய் கிடைத்துவிட்ட விற்றமீனும் கூட இப்போ இழந்துவிட்டு மருந்தினைத் தேடுது காற்றோட்டமில்லா நாலுசுவருக்குள் வாழ்வு கட்டிக்காக்கும் உயிரும் கைதிபோன்ற வலையில் காலநிலைகூட சதிசெய்யும் நிலையில் காசினியை பேணி கைகொடுப்போமே நாளும்