எப்படித்தான் போகுமோ நம்நாடுராணி சம்பந்தர்30.06.22 எப்படித்தான் போகுமோ நம்நாடு ஆக்கம்-233 குழப்பங்கள் கையோங்கி குரல் முழங்கியது கண்ணீரில் நம்நாடு உச்சக்கட்டமானது கண்ணகி கண்களில் தெரிந்த உண்மையே அன்று காவியம் படைத்தது சொந்த பந்தம் சேர்ந்து சந்தி சிரிக்கும் சூழ்ச்சியே நாட்டை சுத்தமாகத் துடைத்து வேற்று நாட்டுக்கு விற்றுண்ணும் சந்தர்ப்பவாதிகள் தமிழனின் கூட்டைச் சிதைத்து போராட்டமென்ற ஏட்டைப் புதைத்து சிங்கள மக்களை ஏமாற்றிய சேட்டை காலம் மாறி காயமாக ஆறாத வடு ஆனது ஆண்டாண்டு ஆண்டு வந்த ஆட்சி பூச்சியமாக மாற விரதம் மூண்ட வரலாறு எப்படி எங்கு போய் முட்டி மோதி நிற்குமோ