பிரியாத உறவுகள்இரா.விஜயகௌரிபிரியாத உறவுகள் விரியாதகனவுகளோடு நித்தமும் பயணிக்கும் பிரியாத உறவுகள் அவை புரியாத நேச இழைவெழுத அழியாத வலைப்பின்னல் ஆங்கே மொழியாத. உணர்வுகளை விழியால் குழைவெழுத-நித்தம் அழையா விருந்தாளி. போலிவர் சொரியாத மலராய் சொரிந்தபடி வரைகின்ற. மலர்வில் மனம்மகிழ எழிலாகும். விடியலே. -நம்மை உரிமைக்குரலாய் உயிர்ப்பிக்கும் பரிவோடு. கரைகின்ற பாசமும் பழகிடில் கனிந்திடும் நேசமும் வேஷமே. இல்லாத காதலும் அன்பின் பரிமாணப்புதையல்களாம் ஆம். குழந்தைகள் எழுதும் உயிர்ப்பினில் அடடா வானவில். பேரெழில் மொழிந்திட எத்தனை அழகியல் உறவிலே பிரியாத வரமாகும் தலைமுறை