பேசாமல் பேசும் மொழிராணி சம்பந்தர்15.09.22 ஆக்கம்-244 பேசாமல் பேசும் மொழி முன்னால் இருப்பவரோடு கண்ணால் பேசிக் கருத்து உருப்பட முகபாவனையில் கை விரல் பின்னலிட அகத்தினால் தூண்டிலிடும் சொற்கள் கூண்டிலிட வாய் திறவாது பேசாமல் பேசும் மொழியே சைகை மொழி தரணியிலே அதிக விகிதமானோர் காது கேளாதவர் பட்டியலிலே சத்தமாய் உளறும் தொழிற்சாலை, யுத்தமாய்க் கதறும் அதிவேகக் குண்டு விமானம்,பீரங்கித் தாக்குதல், கனரக வாகனம் போன்றன வளரும் நாடுகளில் பெருந்தாக்கமே புரட்டாதி 23 விழிப்புணர்வுடன் அரங்கேறியது சைகை மொழித் தினம் இதனாலே உருவானதே உண்மைப் போராட்டமதில் உரிமைக் குரல் மௌன அசைவு மொழியிட ஊடகத்தில் உயிரூட்டி உலகெங்கும் பறை சாற்றி விழிப்புணர்வு ஊட்டுவதும் இதுவே சைகை மொழி .