Selvi Nithianandanசெல்வி நித்தியானந்தன்வகுப்பறை ஆளுமை 540 அகரத்தை மெல்லெனவே எழுதவைத்து அன்பாய் பாசமாய் பரிவாய் அணைத்து மண்ணிலும் சிலேட்டுமாய் கிறுக்கவைத்து சிகரமாய் ஏற்றிவிட்ட பெருந்தகைகள் பள்ளிகளில் பலவாய் இருப்பதும் படிப்பு என்பதால் அறைமாறுவதும் பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து பறப்பதும் நடிப்பும் கற்றலாய் ஆளுமையாகும் சுண்ணாம்புக்கட்டி கரும்பலகையில் ஓவியமாய் சுற்றம்சூழ்ந்து நண்பர்களாய் கூட்டம் சுதந்திரமாய் வகுப்பறையில் நாட்டம் சுபீட்சமாய் கல்வியிலும் ஆளுமையாய் ஏற்றிவைத்த பல ஆசிரியர் எனக்குள்ளே ஏற்றத் தாழ்வின்றி உயர்த்திய ஆசானாய் எப்போதும் தெரியாததை அறியமுயலும்போதும் ஏகமனதாய் விளக்கம் தந்தவர் ஏராளம் தாராளமாய் ஆசிரியர் தினத்தில் மதித்து தலைவணங்கி நிற்கின்றேனே