ஜெயம் தங்கராஜாதங்கராஜாKavi 625 ஒன்றுபடுவோம் ஒன்றுபட்டிங்கு வாழ்தலே வாழ்வு என்றெண்ணிக்கொண்டாலே வராதே தாழ்வு ஒருவர்மேல் ஒருவருக்கு வேண்டாமே வெறுப்பு அருமையாக ஒன்றுகூடி வாழ்வது நம்பொறுப்பு ஆதிமனிதர்கள் காட்டுமிராண்டிகளாக அடிபட்டார் பாதியைக் கடந்த பின்னரே அனுபவப்பட்டார் அன்றைய மனிதர் வேடுவராகக் காட்டில் இன்றைய மனிதரோ நாகரீகத்தின் நாட்டில் கூடி வாழ்தலில் கோடி நன்மை கூறினார் மூத்தோர் அதுவே உண்மை அடம்பன் கொடியும் திரண்டாலே மிடுக்கு இரண்டுகை தட்டலிலே ஓசையின் பிறப்பு தனிமரம் தோப்பாகாது என்பது பழமொழி பிணியது தீரட்டும் பிறக்கட்டும் புதுவழி நானென்ற அகங்காரம் சிந்தைவிட்டு தொலையட்டும் வீணான பெருமைகளின் எண்ணம் விட்டகலட்டும் மேலோரென்றும் கீளோரென்றும் பார்க்காது பேதம் வாழ்வோர் வாழ்வதுவே வணங்கவேண்டிய வேதம் ஏழையென்றும் கோழையென்றும் எதற்கிங்கே பிரிவு ஆளையிங்கு பார்க்காமல் காட்டலாமே பரிவு மதவெறி கொண்டே அலைவதும் தகுமோ அது கூறும் சமத்துவ வாழ்க்கையற்ற ஜெகமோ வேற்றுமைப்பட்டால் அது தருவது வீழ்வாகும் ஒற்றுமைப்பட்டால் அங்கு வருவதே வாழ்வாகும் ஜெயம் 12-10-2022