பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேதுராணி சம்பந்தர்19.01.23 ஆக்கம்-257 பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேதும் உண்டா இல்லையா இவ் வினாவிற்கு விடை காணாது விழி பிதுங்கும் நேரம் கொடிய வைரசும் தேடிய போர் அனர்த்தமும் பொருளாதார வீழ்ச்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் விலை உயர்வால் பசி பட்டினி அகோரத் தாண்டவம் இறப்பு விகிதம் கூட பிறப்பு விகிதம் குறைய போசாக்கு இன்மையால் கொண்டதே கோலம் குண்டு வீச்சு எறிகணையால் விவசாய நிலமதில் பயிர்ச் செய்கை பாழாய்ப் போனதும் பெருகிடும் விளைச்சல் தடையானதே பட்டினியால் உலக நாடுகள் பலவும் படும்பாடு கொட்டித் தீரா வேதனையில் முட்டி அழும் கண்ணீரே வலிமையுடன் பெருகிடுதே.