வரப்புயரசெல்வி நித்தியானந்தன்வரப்புயர வாழ் வென்ற சக்கரம் பற்பல பரிணாமம் சொல்லும் வீழ்ச்சி என்ற நிலையிலும் வீழ்ந்திடா உயர்ந்தே வெல்லும் பாதையில் பலவகை சோதனை படித்து பணிந்து சாதனை உபாதை வந்தாலே வேதனை உடைத்து எழுதலே சிறப்பாகும் விலைவாசி அதிரடி உயர்வு வட்டியும் வீதத்தால் அதிகரிப்பு பொருளாதார பாரிய வீழ்ச்சி பொருளீட்ட நாடுகளின் சூழ்ச்சி விடுமுறை பலருக்கு ஏக்கம் விமானக் கட்டணமும் ஏற்றம் வீட்டிலே பசுமையின் மாற்றம் வீழ்ந்து எழுதலே உயர்ச்சிப்படி