வரப்புயரராணி சம்பந்தர்06.07.23 கவி இலக்கம்-276 வரப்புயர வாழ்வில் வீசுங் காற்று திசையை மாற்றிடுமே கொரோனாவால் ஒடிந்து மடிந்தும் மனிதன் தன் விடாமுயற்சியினால் தனக்கெனத் தொழில் தேடியதே தேவையற்ற செலவு விட்டு வாகனத்தில் போவது நடைப் பயணமானதே செயற்கை மருந்து விடுத்து இயற்கை மருந்து உரமானதே படிக்க மறந்தவன் திரும்பத் திரும்ப படித்து பட்டம் பெற்று நல்ல வேலை கிடைத்தும் வீட்டுத் தோட்டமதில் இறங்கி விளைச்சல் பெருகியதே வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் என்பதைத் தொடரவே தன் செலவு குறைத்து உதிரத்தை வியர்வை ஆக்கி சொந்தக் காலில் விந்தை ஆனாரே .