மாற்றம் வேண்டும்கவிக்கோ பரம விஸ்வலிங்கம்மாற்றம் வேண்டும்…. அழலோடு விளையாடி அரசாளுமே – அதன் நிழலோடு நிதம் பேசும் சமாதானமே குழலோடு ரவை பாடும் கோரங்களே – அதை குழுவோடு கொண்டாடும் பாவங்களே – மக்கள் அழுகின்ற அவலங்கள் அரங்கேறுதே – அதை அழகென்று இரசிக்கின்ற அரசாங்கமே. வாழ்க்கையும் பகையாகி வளர்கின்றதே வரலாறும் புகையாகி மறைகின்றதே அதிகாரம் அரசாளும் நிலை மாறவே – புதிய அகராதி படைக்கின்ற நிலை வேண்டுமே. வாழ்கின்ற மக்களுக்கு வளி காட்டவே – உலகில் வளமான அரசெங்கும் எழ வேண்டுமே ஏராழ்ந்த நிலம் வாழும் பயிர்போலவே – மக்கள் பாராளும் நிலையொன்று வரவேண்டுமே! கவிக்கோ பரம விஸ்வலிங்கம்