எழுத்தறிவு இல்லையெனில்ரஜனி அன்ரன்எழுத்தறிவு இல்லையெனில்.....கவி...ரஜனி அன்ரன் (B.A) 07.09.2023 மொழிக்கு மூலாதாரம் எழுத்தே எழுத்தே மொழிக்கு அணிகலன் சமூகத்தின் ஆணி வேரே எழுத்தறிவு மொழி பேசும் இனம் அழியாமல் இருக்க எழுத்தறிவே அவசியம் எழுத்தறிவு இல்லையெனில் மொழியே அழிந்து விடும் ! பட்டறிவு பகுத்தறிவு பக்குவம் இருந்தாலும் அறிவினைப் பெருக்க ஆற்றலை வளர்க்க இலக்கினை அடைய இமயமாய் உயர தகுதியைப் பெற தராதரத்தோடு வாழ வேண்டும் எழுத்தறிவு ! எந்த மொழி என்றாலும் எழுத வாசிக்க புரிந்துகொள்ள தெரியாத நிலையே எழுத்தறிவின்மை வறுமை போர்ச்சூழல் அரசியல் நெருக்கடிகளால் தலைவிரித்தாடுகிறது எழுத்தறிவின்மை ! இணையவழி முன்னேற்றம் கணணிப் பயன்பாடு உலகமயமாக்கல் தொழில்நுட்ப அபாரமென நிறைவான காலகட்டத்தில் எழுத்தறிவின்மையென்பது வெட்கப்பட வேண்டிய விடயமே ! https://www.youtube.com/watch?v=j3tueZjUMdk