நமசிவாயா எதற்குசிவரூபன் சர்வேஸ்வரிநமசிவாயா எதற்கு..!? கோயில்களெல்லாம் அலங்கார உற்சவம் கோப்பைகளேந்திய மனிதர்கள் ஊர்வலம் காத்திரமில்லையென்று- சிலர் கையேந்தும் நிலையுமேனோ? பாவப்பட்ட ஜென்மங்களை -இப் பாரினில் சுமந்துவிட்டு- வீதி ஓரம் விட்டெறிந்து விளையாட்டாய் போனதாலே தந்தையும் தாயும் தெரியாமல் அனாதைகளென்ற பெயர் பெற்றவரைப் பெற்றவர்கள்- இன்று பின்புறம் தள்ளியதால்- பெற்றவர் இன்று ஆச்சிரமத்தில் அகதிகள் பெற்ற கடன் தீர்ப்பதற்கு பிள்ளைகள் சிலர் இங்கில்லை உற்ற கடன் தீர்ப்பதற்கு- சில உறவுகளிற்கு வழியில்லை சொத்துச் சுகம் , பணமிருந்தென்ன சொந்தமெல்லாம் வேறுகூறாகி நற்றுனையில்லை யென்றால் நமசிவாய எதற்கு..!? - கவிஞர் சிவரூபன் சர்வேஸ்வரி. இலங்கை.