பள்ளிக்காலம்ரஜனி அன்ரன்"பள்ளிக்காலம்" .... கவி...ரஜனி அன்ரன் (B.A) 26.10.2023 பள்ளிக்காலம் பசுமைக் காலம் பசுமை நிறைந்த உலாக்காலம் பட்டாம் பூச்சியெனப் பறந்து வட்டமிட்ட வனப்புக்காலம் கற்பனையில் மிதந்த கனாக்காலம் பெற்றவர் கனவை நனவாக்கிய காலம் என் வாழ்வின் வசந்தகாலம் ! திறமைக்கு களம் தந்த கூடம் திறவுகோலான மாடம் கவலையே இல்லாத காலம் சிலநொடிகள் மனக்கசப்பு சின்னச் சின்ன சண்டைகள் அடுத்தநொடி இணைந்தபடி போட்டிகளில் கலந்தபடி போட்டி போட்டுப் படித்திடுவோம் ! பள்ளிக்காலம் படிப்பு ஒருபக்கம் விளையாட்டுப் போட்டிகள் மறுபக்கமென மறக்க முடியாத நினைவுகள் மனதை வருடும் நிகழ்வுகளென பன்னிரெண்டு ஆண்டுகள் எனைச் சுமந்தபள்ளி பணியோடு பாடம் கற்றுத்தந்த ஆசான்கள் வாழ்வின் பொக்கிஷமான வசந்தகாலமே ! https://www.youtube.com/watch?v=cq7waWeNkCE