ஒளியின்றி ஒளிர்வெங்குஇரா.விஜயகௌரிஒளியின்றி ஒளிர்வெங்கு…….. விழியின்றி. ஒளியில்லை ஒளிர்வதற்கு. வழியுமில்லை வழிகாட்டும் வாழ்வின்றேல் ஒளிமுகத்தை உணர்வதெப்போ தெளிவெழுதும் வார்த்தைகளும் தென்றலொத்த தழுவல்களும் கையிணைத்த உறவிணைவும் ஒளிர்வெழுதி உயர்வு செப்பும் பட்டுக்கும் பகட்டுக்கும்-தினம் பவனிவரும். மாந்தர் முன்னே அக ஒளியை. ஏற்றி வைக்கும் அறிவின் விடியலைத்தான் ஒளிர்வென்போம் தாழ்வின் பக்கலிலே தவிப்போர்க்கு ஏற்றத்தின் சிறு பொறியை உணர்த்தி தொடுபுள்ளி. இட்டெழுவோர் -ஆங்கு பெரு வெளிச்சத்தின் சிறு பொறிகள் ஆம் கருமைக்குள் கசங்கிவதோ கவலைக்குள் மூழ்கிவதோ-நாம் வாழப்பிறந்தவர்கள். பிறர் வாழ்வுக்கும் வழி தொடுப்போர் அகவொளி ஏற்றி விடியல் செய்வோம்