மனிதத்தின் நேயமேஇ.உருத்திரேஸ்வரன்கவிதை 214 மனிதத்தின் நேயமே பாலைவனத்தில் நீரை தேடுவது போல இன்றைய மனிதநேயம் வானம் பார்த்த பூமியாய் வறண்டு கொண்டிருக்கும் மனிதநேயம் அவரவர் சுயநலத்தால் மனிதநேயத்தை தேடும் நிலை இருந்தாலும் அங்கொன்று இங்கொன்று என காண்பது மகிழ்வு அன்பென்னும் நீர்விட்டு பரிவுவென்னும் பசளையிட்டு பாசமென்னும் மண்ணில் விதையிட்டு நடு நாளை மனிதநேயம் மரமாகும் உலகில் நன்றி வணக்கம்