மனிதஉரிமைரஜனி அன்ரன்“ மனிதஉரிமை “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 14.12.2023 இனமத நிற பேதமின்றி சமத்துவத்தோடு கண்ணியமாய் வாழ இலட்சியத்தோடு உருவானதே மனித உரிமை ஒருவரின் உரிமையைத் தட்டிப் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது மனித உரிமை பிறப்பின் உரிமையே ! ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ சட்டத்தின் முன் சமனாக நிற்க உரிமைகள் பறிபோகும்போது சட்ட உதவியை நாடும் உரிமை சட்டப்படியான மனித உரிமையே ! பேச எழுத சிந்திக்க தகவல்களைப் பரிமாற எல்லைகள் வகுத்திட முடியாது ஜனநாயகத்தின் அடிநாதம் மனிதஉரிமைகளே மனித உரிமைகளே மானிடர்க்கு பெருமை ! https://www.youtube.com/watch?v=fXTAZjS_Cy0