உலகின் நிலைமாற என்னென்ன கொண்டுவருகின்றாய்தங்கராஜாகவி 705 உலகின் நிலைமாற என்னென்ன கொண்டுவருகின்றாய் பூமியில் சந்தோசம் நிகழ்ந்திட வேண்டும் சாமியின் வீடது சுகம்பெற வேண்டும் அழகிய வாழ்க்கையதை கண்மூடியே வாழ்ந்துவிட்டோம் அழுக்கான காரியத்தால் படுகுழியில் வீழ்ந்துவிட்டோம் விலைமாற்றங்கள் பொருட்களின் விலைகளில் நிகழ்கின்றது நிலைமாற்றங்கள் வாழ்க்கையின் நிலைகளில் நிகழ்கின்றது போன ஆண்டு அறியாமைக்குள் சிறைப்பட்டிருக்கலாம் நானாவென வியக்கலாம் நீயேதான் விடுபடலாம் நேற்றைய நாள் விலகியே நகர்ந்துவிட்டது இன்றைய நாள் பூலோகத்தில் பூத்திருகின்றது நிறம் மாறிய மாந்தருக்கோர் வேண்டுகோள் புறம்பேசி கழிப்பதனால் சிதைந்திடாதோ நாள் உலகத்தை திருத்திட ஒருவனால் முடியாது கலகமேயில்லாது சிலர் வானம் விடியாது உன் மனதின் மாறுதலே தேவை கண் திறப்பின் மற்றவரும் கண்டடைவார். ஜெயம் 3-01 24 https://youtu.be/JMpwjlwg2Fg?si=-hO02yrzu8sLEB_B