Kavikco Parama Visvalingam
Kavikco Parama Visvalingam
தரமாய் நிமிர்வாய் நாளை…..
தரையினில் வீழ்ந்த விதைகள் எல்லாம்
தாவரமாகும் தரணயிலே
வரமாய் கிடைத்த வாழ்க்கையிது
தரமாய் நிமிர்வாய் தலைமகனே!
உரமா இருக்கும் உறவுகளில் - சிலர்
சிரமே தாழ்த்தி சிண்டு இணைப்பார் - இரு
கரமே உனது எனச் சொல்வார்
கவனம் அவர்மேல் கண்ணாயிரு.
வெறுவாய் மென்னு விளம்பரம் செய்து
வீணாய்ப் போகாதே
உரமாய் நிற்பாய் உறுதுணையாக – நாளை
உயர்வாய் நிற்பாய் குன்றாக!
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்
