புழுகு வெடிராணி சம்பந்தர்08.02.2024 ஆக்கம் 302 புழுகு வெடி கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் பூங்கொத்து வெடி பத்துப் பத்தாய்ப் பறந்து பறந்து வித்தை காட்டும் சீன வெடியோ பத்து பத்து நூறாய் வெடிக்க இருக்கும் பற்றும் இருந்த இடம் இல்லாது அற்றுத் தோற்றிடும் பீரங்கி புழுகு வெடிகளே காசு கொடுக்காது காற்றில் மாசு படாது மூசி மூசி நாசி துடிக்க வெடிக்கும் பம்மாத்து வாய் அடிக்கும் வெடி இதயம் படபடக்க இல்லாத பொல்லாத கதைகள் பல சொல்ல கையும், காலும் , வாலும் முளைத்து வெடிக்கும் சுக்கல் வெடியான புழுகு வெடியே .